இந்தியா, மே 5 -- லக்னத்தில் சந்திரன் இருந்தால், என்ன மாதிரியான நன்மை தீமைகள் உருவாகும் என்பது குறித்து, பிரபல ஜோதிடரான அவிநாசி ஜோதிலிங்கம் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, " எந்த லக்னமாக இருந்தாலும், சந்திரன் அங்கு இருக்கிறார் என்றால், ராசியும் லக்னமும் ஒன்று என்று அர்த்தம். லக்னத்தில் சந்திரன் இருந்தால், சுற்றுலா, சிறுதூரபயணம், விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று விதவிதமான உணவுகளை சாப்பிடுவது உள்ளிட்டவை அந்த ஜாதகக்காரர்களுக்கு மிகவும் பிடிக்கும். சந்திரன் 15 நாட்கள் வளரும், 15 நாட்கள் தேயும்.

அதனால், வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் அல்லது வருகிற வருமானத்தில் மிச்சம் பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவும். இவர்களுக்கு அதிமாக தாய் பாசம் இருக்கும்.

உறவுகளை அதிகமாக நேசிப்பார்கள். வீடோ, வாகனமோ எது வாங்...