இந்தியா, பிப்ரவரி 17 -- இந்தியாவில் உள்ள உணவு வகைகள் பல வெளிநாடுகள் வரை பிரபலமடைந்துள்ளன. அதேபோல வெளிநாட்டு உணவுகளும் இந்தியாவில் பிரபலம் அடைந்து வருகின்றன. அதுவும் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு உணவுகளுக்கான தனி ஹோட்டல்கள் இருக்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருந்து வருகிறது. நாமும் நமது உணவுகளில் இல்லாத ஒரு தனி சுவையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம். குறிப்பாக சைனீஸ் உணவு வகைகள் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவே மாறிவிட்டது. தற்போது பெரிய நகரங்களில் எங்கு திரும்பினாலும் சைனீஸ் ஹோட்டல்கள் தென்படுகின்றன. அந்தளவிற்கு மக்களும் சைனீஸ் உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர்.

சைனீஸ் உணவுகளை நாமே செய்து சாப்பிடலாம். ஆனால் சில சமயங்களில் இவை சரியாக வருவதில்லை. இந்தோ-சைனீஸ் உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றுதான் ஹனி கார்லிக் க...