இந்தியா, பிப்ரவரி 13 -- கடந்த 1990களில் இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் நடைமுறைக்கு வந்து இந்திய சந்தையானத சர்வதேச அளவில் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு வகைகளில் புதிய வருவாய் வழிகள் உருவாகின. அதன்படி சினிமா பிரபலங்களின் பல்வேறு பொருள்களை விளம்பரம் செய்யும் தூதராக மாறியதன் காரணமாக நடிகர், நடிகைகளின் சந்தையும் விரிவடைந்து சம்பளமும் உயர்ந்தது. அத்துடன் பான் இந்தியா அளவில் பிரபலமடையும் பெரிய நட்சத்திரங்களாக முன்னணி நடிகர், நடிகைகள் மாறினர்.

அந்த வகையில் ஒரு படத்துக்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ என்ற பெருமையை தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவி பெற்றார். 1992இல் வெளியான ஆபத்பந்தவுடு படத்துக்காக அவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றார். நடிகர்களின் சிரஞ்சீவி என்றால், நடிகையில் சம்பள விஷயத்தில் சளைத்தவர்கள் இ...