Chennai, பிப்ரவரி 4 -- வீட்டை விட்டு நாம் எங்கு சென்றாலும் பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருப்பது பல்வேறு ஆபத்துகள், பிரச்னைகளில் இருந்து தற்காத்து கொள்ள உதவும். அந்த வகையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது அலுவல் பணி காரணமாகவோ வீட்டை விட்டு வெளி இடங்கள், குறிப்பாக வெளியூர் பயணங்களின்போது ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவதற்கான சூழல் பலருக்கும் உருவாகும்.

இதுபோன்ற நேரங்களில் உங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது மிக மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அதாவது நீங்கள் வசிக்க இருக்கும் இடத்தில் ரகசிய கேமராக்கள் எங்காவது இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களது தனியுரிமை பாதுகாப்பு என்பது ரகசிய கேமராக்களின் மூலம் உங்களை அறியாமலேயே மீறப்படும்.

பல்வேறு நோக்கங்களுக்காகவும், காரணங்களுக்காகவும் வெவ்வேறு நகரங்களுக்கு பலரு...