இந்தியா, ஏப்ரல் 5 -- தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது .

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 19 செ.மீ, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 15 செ.மீ, ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), அடையாமடை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 13 செ.மீ, ஊத்துக்குளி (திருப்பூர்) 12 செ.மீ, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்) 11 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்றைய தின...