இந்தியா, ஏப்ரல் 4 -- தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை மற்றும் வெப்பநிலை மாறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

03-04-2025 (இன்று): தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுர...