இந்தியா, ஏப்ரல் 17 -- நாம் அனைவரும் இதய நோய்களிலிருந்து விலகி இருக்க விரும்புகிறோம். ஆனால் பலரும் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய தினசரி அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதில்லை. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இளம் வயதினரும் உயிரை விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் நாம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

உடற்பயிற்சி தவறாமல் மேற்கொள்வது: இதய தசைகள் மீண்டும் மீண்டும் சுருங்கி வேகமாக வெளியேறும்போது அவை வலுவடைகின்றன. எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது முக்கியம்.

போதிய தூக்கம் தேவை: ஆரோக்கியமான இதயம் மற்றும் வாழ்க்கை முறையை உறுதிப்ப...