இந்தியா, பிப்ரவரி 20 -- மாறிவரும் வாழ்க்கை சூழ்நிலையில் நமது உணவு முறையும் மாறி வருகிறது எனக் கூறலாம். தொழில்நுட்ப முன்னேற்றங்களால் நமது உணவும் பல படிநிலைகளில் முன்னேறி உள்ளது. ஆனால் முந்தைய காலகட்டங்களில் நமது உடலுக்கு கிடைத்த சத்தான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உணவு வழியாக கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் அத்தனை ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை. அதி வேகமான வாழ்க்கையில் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல் சாப்பிட்டு வருகிறோம். எனவே தினமும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் தினமும் காலை வேளையில் சாப்பிடும் உணவு அந்த நாள் முழுவதும் நம்மை ஆற்றலுடன் இயங்குவதற்கு உதவுகிறது.

இந்த வரிசையில் காலையில் நாம் வழக்கமாக சாப்பிடும் சாப்பாட்டில் கூட அதிக சத்துள்ள உணவுகளை சேர்க்கலாம். அதற்கு சிற...