இந்தியா, பிப்ரவரி 4 -- மத்திய சுகாதார பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து மருத்துவர் புகழேந்தி விளக்குகிறார்.

கடந்தாண்டைவிட இந்தாண்டு சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் அதிகமாகத் தெரிந்தாலும், இது போதுமானதா? என்ற கேள்வி எழுகிறது? சுகாதாரத்துக்கு ஜிடிபியில் 2.5 சதவீதம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற விதி உள்ளது. எனினும் உலக சுகாதார நிறுவனம் 5 சதவீதம் என விதித்துள்ளது. ஆனால் குறைந்தபட்சம் 2.5 சதவீதமாவது ஒதுக்கப்படவேண்டும். ஆனால் அந்தளவுக்கு ஒதுக்கப்படவில்லை. கடந்தாண்டைக்காட்டிலும் 9.5 சதவீதம் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், வளர்ந்து வரும் சுகாதார சவால்களுக்கு இது போதுமானதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.

தமிழகத்தில் கூட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகம் வருகிறது. அதனால் ஏற்படும் இழப...