இந்தியா, பிப்ரவரி 14 -- தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், ஹீரோக்களின் பிரண்டாகவும் பல படங்களின் தோன்ற ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் ஸ்ரீமன். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு என 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் அடிப்படையில் பரத நாட்டியம் நன்கு கற்றி தேர்ந்த கலைஞராகவும் உள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரயில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் நடிகர் ஸ்ரீமன். இவரது அப்பா தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் பிரகாஷ் ரெட்டி. திரைப்பட தயாரிப்பாளர் மகன் என்பதால் பிறந்த 1972ஆம் ஆண்டிலேயே கொரடா ராணி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். தொடர்ந்து 1984 வரை பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தார். இதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

சென்னையில்...