இந்தியா, பிப்ரவரி 13 -- இந்தியாவின் விடுதலைக்கும் அதன் வளர்ச்சிக்கும் பல தலைவர்கள் அரும்பாடு பட்டுள்ளனர். அவர்களின் அயராத உழைப்பே இன்று இந்தியாவை வளர்ச்சி பாதையை நோக்கி நகர வைத்துள்ளது. அதில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் தான் இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு. இவர் ஒரு கவிஞராக, சுதந்திர போராட்ட வீரராக என பொது வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர் 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பிறந்தார். அவரது பிறந்தநாளான இன்று வ அவர் குறித்துஇங்கு காண்போம்.

சரோஜினி நாயுடு இந்தியாவின் போராட்டத்திற்கு எதிராக ஓங்கி ஒலித்த முதல் பெண் குரலாகவும் இருந்தார். மேலும் இந்தியாவின் முதல் பெண் ஆளுநராகவும் பதவி ஏற்றவர் இவர்தான். சரோஜினி நாயுடு ஹைதராபாத்தில் பிறந்தார். அங்கு இருந்த நிஜாம் கல்லூரியில் பயின்றார். மெட்ராஸ், லண்டன் மற்றும் கேம்பிர...