இந்தியா, மார்ச் 4 -- இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரராகவும், இரட்டைர் பிரிவு ஸ்பெஷலிஸ்டாகவும் இருந்து வரும் ஜாம்பவான் வீரர் ரோஹன் போபண்ணா. 6.4 அடி உயரத்தில் இருக்கும் போபண்ணா 2003 முதல் இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். இரட்டையர் பிரிவு நாயகனாக வலம் வரும் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேசஅளிவில் டென்னிஸ் விளையாட்டை விளையாடி வரும் வீரராக திகழ்கிறரார்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவை சேர்ந்த போபண்ணா தனது 11 வயதில் இருந்தே டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் டென்னிஸ் விளையாட்டில் முத்திரை பதித்த இவர் 2003இல் தொழில்முறை டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றார். இந்தியாவின் டேவிஸ் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட இவர் தனது முதல் சர்வதேச வெற்றியை ஜப்பான் வீரருக்கு எதிராக இந்த தொடரில் தான் வென்றார்.

ஆப்ர...