இந்தியா, ஜனவரி 26 -- ஒவ்வொரு துறையிலும் அந்த துறையை முழுதாக நேசித்து தனது முழு உழைப்பையும் கொடுத்தால் நிச்சயமாக வெற்றியை உறுதியாக்கலாம். ஆனால் தொடர் விடாமுயற்சி இருந்தாக வேண்டும். அப்போது தான் இது சாத்தியமாகும். அதிலும் திரைத் துறையில் ஒருவர் தன்னை நிலைநாட்ட வேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. அப்படி தனது அயராத நீண்ட கால உழைப்பால் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் ரவி தேஜா, அவர் இன்று தனது 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் குறித்தான் சுவாரசிய தகவல்களை இங்கு காண்போம்.

ஆந்திரா பிரதேசத்தில் உள்ள கோதாவரி மாவட்டம் ஜக்கம் பேட்டையில் 1968 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பிறந்தார். இவரது தந்தை ராஜ் கோபால் ராஜு ஒரு பார்மசிஸ்ட் ஆக பணி புரிந்தார். இவருக்கு எந்த வித திரைத்துறை பின்னணியும் கிடையாது. ரவி ...