இந்தியா, பிப்ரவரி 18 -- இந்தியாவுக்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற பெருமைக்கு உரியவராக திகழ்பவர் இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தியாவின் தங்க மங்கையாக இருப்பதுடன், சமீபத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசால் அளிக்கப்படும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனு பாக்கர் துப்பாக்கி சுடுதலில் 16 வயதிலேயே காமன்வெல்த் தங்க பதக்கம், யூத் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவராக இருந்துள்ளார். பொதுவாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களில் பலர் மல்யுத்தம், பாக்ஸிங் போன்ற போர்க்குணம் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இதிலிருந்து மாறுபட்டு மனு பாக்கர் துப்பாக்கி சுடுதலில் தன்னை ஈடுபடுத்தி...