இந்தியா, பிப்ரவரி 19 -- தெலுங்கு திரையுலகினரால் கலாதபஸ்வி என்ற அழைக்கப்படும் கே. விஸ்வநாத், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக உள்ளார். தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய படைப்பாளியாக போற்றப்படும் கே. விஸ்வநாத் வழக்கமான சினிமா படங்களை மாற்று சினிமாவுடன் இணைத்து புதுமையான படைப்புகளை வழங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற இயக்குநராக திகழ்ந்திருந்தார்.

சுமார் 60 ஆண்டு காலம் வரை திரையுலகில் பயணித்திருக்கும் விஸ்வநாத், ஆடியோகிராபராக தனது வாழ்க்கையை தொடங்கினார். தனது சினிமா கேரியரில் 53 படங்களை இயக்கியிருக்கும் இவர், தனது படங்களில் சாதி, பாலின பாகுபாடு, பெண் வெறுப்பு, குடிப்பழக்கம் போன்ற சமூக விஷயங்களை அடிப்படையாக கொண்ட கதைகளை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய சங்கராபரணம் என்ற தெலுங்கு படம் தேசிய விருதை வென்றதோடு பல்வேற...