இந்தியா, மார்ச் 6 -- தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திர நடிகராக தோன்றி, 1980களில் இருந்து சுமார் நான்கு தசாப்தங்களாக நடிப்பில் முத்திரை பதித்து வருபவர் நடிகர் சார்லி. எதார்த்தமாக சினிமாவில் நடிகராக மாறிய சார்லி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சிம்பு, தனுஷ், லேட்டஸ்டாக சிவகார்த்திகேயன் வரை ஹீரோக்களுடன் இணைந்து நடித்த மூத்த நடிகராக திகழ்கிறார்.

சார்லி என்ற ரசிகர்களால் அறியப்பட்ட இவரது ஒரிஜினல் பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்பதாகும். சினிமாவுக்காகவும், காமெடியன் சார்லி சாப்ளின் மீது இருந்த பற்று காரணமாக தனது பெயரை சார்லி என்ற மாற்றிக்கொண்டாராம். இவருக்கு இந்த பெயரை வைத்தது மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் எனவும் கூறப்படுகிறது.

விருதுநகர் தான் நடிகர் சார்லியின் சொந்த ஊராக இருந்தாலும், இவர் வளர்ந்தது, படித்தது எல்...