இந்தியா, ஏப்ரல் 28 -- HBD Actress Samantha: நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கக் கூடியவர். இவர் இன்று தனது 37ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.

யார் இந்த சமந்தா? : ஜோசப் பிரபு மற்றும் நினைட் பிரபு தம்பதியினருக்கு 1987ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி மகளாகப் பிறந்தவர், சமந்தா. தந்தை ஜோசப் பிரபு, பிறப்பால் ஒரு தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்தவர். தாய் நினைட் பிரபு, ஒரு மலையாளி குடும்பத்தைச் சார்ந்தவர். சமந்தாவுக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர். மூத்தவர் பெயர், ஜோனத் மற்றும் இரண்டாவது அண்ணனின் பெயர் டேவிட்.

சென்னையின் பல்லாவரம் பகுதியில் வசித்து வந்த நடிகை சமந்தா, சென்னையின் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் கல்வியும், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டமும் படித்த...