இந்தியா, பிப்ரவரி 14 -- காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என சிலர் சொல்வதால் கொண்டாடாமல் இருக்க முடியுமா என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் 30 இணையர்களுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர் பிரியா மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: DMK: 'இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதில் பெருமை கொள்கிறோம்!' உதயநிதி முன் அதிர பேசிய சேகர்பாபு!

தமிழ்நாடு இந்து சமய அறநிலத்துறை சார்பாக 30 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள்; காதலர் தினம். இதை சொன்னால் சில பே...