மதுரை,பழங்காநத்தம்,திருப்பரங்குன்றம், பிப்ரவரி 4 -- திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக தாலிபன் அரசுக்கு 2026 இல் மக்கள் பதிலளிப்பார்கள் என்றும், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேட்டியளித்துள்ளார்.

'திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்' என்கிற கோரிக்கையுடன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடும் என மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை நேற்று முதல் 2 நாட்களாக பிறப்பித்து இருந்தார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என இந்து அமைப்பினர் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினர்.

இந்த நிலையில் நீதிபதிகள் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி தீ...