இந்தியா, பிப்ரவரி 27 -- GVPrakash: நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடித்த திரைப்படம், கிங்ஸ்டன். இந்த திரைப்படம் வரும் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கிங்ஸ்டன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இப்படத்தினை கமல் பிரகாஷ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ஜி.வி.பிரகாஷின் 25ஆவது படம் என்பதால், இப்படத்திற்கு அவரே இசையமைத்து தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

அப்போது கிங்ஸ்டன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதன்பின், மேடையில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ''ஜி.வி.பிரகாஷுடைய முதல் தரப் பண்பு என்றால், எந்த நேரத்திலும் டயர்டு ஆக மாட்டார். நான் வந்து நைட் இரண்டு மணிக்கு போன் பண்ணி, ஒரு ஐடியா வந்திருக்கு. எங்கு இருக்கீங்க.. அப்படின்னு கேட்பேன். இது ரொம்ப நாளைக்கு முன்னாடி...