இந்தியா, மே 1 -- மேஷ ராசியில் இருந்த குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதி, சித்திரை மாதம் 18ஆம் நாளான இன்று பகல் 1 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படியும், மாலை 5.19 மணிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படியும் குரு பெயர்ச்சி ஆகிறார். கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க நேரப்படி வழிபாடுகள் நடைபெறும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் இருந்த குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு வருவதால், மன அழுத்தம் தீரும். தொழில், உத்யோகம், வியாபரத்தில் செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக இருந்த அலைச்சல்கள் மற்றும் பயங்கள் நீங்கி அமைதி கிடைக்கும். 6, 8, 10ஆம் இடங்களை குரு பகவான் பார்ப்பது விஷேஷம் தரும். சத்ருக்கள், துரோகிகளை வெல்வீர்கள்.

ஜென்ம ராசிக்கு வரும் குரு பகவான், 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். 30 வயதை கடந்த ரிஷப ராசிக்காரர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இ...