இந்தியா, மார்ச் 6 -- மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை அவர்கள், அவர்களின் அடிப்படை தேவைகளுக்கு, முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்குக் காரணம் அவர்களின் சுக்கிரன் உச்சமாக இருப்பது.

உங்களுக்கு தற்போது விரையச் சனி நடந்து கொண்டிருக்கிறது. உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்த குரு மூன்றாவது இடத்திற்கு செல்கிறார்.மூன்றாம் இடத்திற்கு செல்லும் குரு கண்டிப்பாக நல்லது இல்லை.

ஆனால் இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவர் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து அவர் பார்க்கும் சில இடங்களை பார்க்கிறார்.ஆம், அவர் ஏழு, ஒன்பது பதினொன்று ஆகிய இடங்களை பார்க்கிறார்.

ஒன்பது மற்றும் பதினொன்றாம் இடங்களை குரு பார்ப்பது என்பது மிகவும் கொடுப்பினையான விஷயமாகும். இதனால், மூன்றாம் இடத்தில் குரு வந்த போதும், பிரச்சினைகளை சமாளித்து ஓடக்கூடிய வல்லமையானது உங்க...