இந்தியா, ஏப்ரல் 6 -- மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடையும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியையும் பார்வையிடுகிறார்.

ரிஷப ராசியில் இருக்கும் ரோகிணி நட்சத்திரம் சந்திரணின் நட்சத்திரமாக இருந்து வருகிறது.

ராகு திசையில் இருக்கும் ரோகிணி நட்சத்திரகாரர்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றியை பெறுவீர்கள். படிப்பு, வேலை வாய்ப்புக்காக சிறப்பாக அமையும். வெளிநாடு வேலை வாய்ப்புகளை கொடுக்கும்.

திருமண வாய்ப்புகள் கைகூடும் காலமாக இருந்து வருகிறது. காதலித்து வருபவர்கள் வீட்டில் திருமணத்தை பற்றி பேசும் காலமாக உள்ளது. திருமணமாகி கணவன் - மனைவி இடையே இருந்த விரிசல்கள் அகலும்., திருமண சிக்கல்கள் அகலும்.

வேலை மாற்றம், இடம் மாற்றம், தொழில் மாற்றம் என எது வேண்டுமானாலும் நிகழலா...