இந்தியா, ஏப்ரல் 18 -- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

சிம்ம ராசியில் இருக்கும் மகம் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திரனருக்கு 25 வயது வரை சுக்கிர திசை இருந்து வருகிறது. படிப்பு சார்ந்து இருந்து வந்த நெருக்கடிகள் அகலும். வேலை தோடுவோருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். முயற்சி மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

31 வயது உள்ளவர்களுக்கு சூரிய திசை இருந்து வருகிறது. திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் அமையும். கணவன் - மன...