இந்தியா, டிசம்பர் 8 -- குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (டிச.08) இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அதேவேளையில் குஜராத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அந்த கட்சி 17 தொகுதிகளிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம்ஆத்மி 5 இடங்களிலும், மற்ற கட்சிகள் தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் முக்கியமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதிகளிலும் பாஜகவின் பெற்றி பிரகாசமாக உள்ளது. முஸ்லீம் வேட்பாளர்கள் ஒருவருக்கு கூட இந்தத் தே...