இந்தியா, பிப்ரவரி 10 -- வெஜ் உணவுகளின் சுவையை அதிகரித்துவிடுகிறது பச்சை பட்டாணி, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னவென்று பாருங்கள். அதை நீங்கள் தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு என்ன கிடைக்கிறது. பச்சை பட்டாணியை சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பச்சைப் பட்டாணி இந்திய சமையலறையில் அதிகம் இடம்பெறும் உணவுகளுள் ஒன்று, இதன் சுவை சிறிது இனிப்பு கலந்து அசத்தலாக இருக்கும். ஆனால் இது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. இந்த பச்சை ஜெம்மில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதை நீங்கள் அன்றாடம் சாப்பிட வேண்டியதன் காரணங்களை தெரிந்துகொண்டால் அது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

பச்சை பட்டாணியில் உங்கள் உடலுக்குத் தேவையான எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் எண்ணற...