இந்தியா, பிப்ரவரி 4 -- தமிழ் சினிமாவில் காமெடி கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக கவுண்டமணி இருந்து வருகிறார். தனது காமெடியால் ரசிகர்களை தலைமுறைகளை கடந்து சிரிக்க வைப்பவராக இருந்து வரும் கவுண்டமணி, இன்றைய டிஜிட்டல் தலைமுறையினரின் மீம் நாயகனாகவும், ரீல்ஸ் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையடுத்து கவுண்டமணி கதையின் நாயகனாக ஒத்து ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவுண்டமணி தனது நக்கல் பேச்சு சிறிது அளவும் குறையாமல் நகைச்சுவையாக பேசி கலகலப்பூட்டினார். படம் குறித்து பேசும்போது படத்தில் பணியாற்றிய நடிகர்கள், டெக்னீஷ்யன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது படத்தின் காமெடி வசனம் போல் இன்னும் இண்டு இடுக்கில் உள்ள சந்து பொந்தில் உ...