இந்தியா, ஏப்ரல் 10 -- Good Bad Ugly: நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.அஜித் ரசிகர்களுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் இடம் பெற்ற முக்கியமான மொமண்டுகளை நெட்டினர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர். அந்த தொகுப்பை பார்க்கலாம்.

குடும்பத்திற்காக தன்னுடைய கேங்கஸ்டர் தொழிலை விட முடிவு செய்யும் ஏகே, செய்த தவறுகளுக்காக ஜெயிலுக்கு சென்று தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார். அதே நேரம் இது தன்னுடைய மகன் விஹானுக்கு தெரியாமலும் பார்த்து கொள்கிறார். மனைவி ரம்யாவும், தாத்தாவும் அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறார்கள். விஹான் கேட்கும் போதெல்லாம் அப்பா பெரிய பிசினஸ் மேன்.. அதனால் நினைத்த போதெல்லாம் அவரால் வரமுடியாது என்று சொல்லி ச...