இந்தியா, ஏப்ரல் 2 -- Good Bad Ugly Update: நடிகர் அஜித்- திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப்படத்தின் புக்கிங் நாளை மறுநாள் 8.02 மணிக்கு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியா கிளிட்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, குட் பேட் அக்லி 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருப்பதாக தகவல் வெளியிட்டு இருக்கிறது.

அண்மைகாலமாக வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் 2.30 மணி நேரத்திற்கு அதிகமாகவும், சில படங்கள் 3 மணி நேரத்திற்கு மேலாகவும் இருந்து வரும் நிலையில், குட் பேட் அக்லி படக்குழுவின் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக...