இந்தியா, ஏப்ரல் 10 -- Good Bad Ugly Update: அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்திற்கு நேற்றிலிருந்தே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதனால், இன்று முழுவதுமே சமூக வலைதளங்களில் குட் பேட் அக்லி படம் தொடர்பான பேச்சுக்களே உலா வந்தன.

சாதரண ரசிகர்களிடம் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், பெரும்பான்மையான அஜித் ரசிகர்களுக்கு படம் பிடித்திருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் குட் பேட் அக்லி படம் தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது. ஹெச் டி தரத்தில், வகை வகையான குவாலிட்டியில் முதல் நாளிலே படம் கசிந்தது படக்குழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப...