இந்தியா, பிப்ரவரி 28 -- Good Bad Ugly Tamil Teaser: பட்டாசாய் வெளியான குட் பேட் அக்லி டீஸரில் நடிகர் அஜித் வெவ்வேறு லுக்கில் ஸ்டைலாக காட்சியளித்தது பலரை ஈர்த்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீஸர் பிப்ரவரி 28ஆம் தேதியான இன்று மாலை வெளியானது.

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீஸரில் தொடக்கத்தில் ஒரு வயதான வில்லன், ''ஏ.கே. ஒரு ரெட் டிராகன். அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கானாம். அவன் மூச்சிலேயே முடிச்சிருவோம்'' என கோபத்துடன் பேசுகிறார்.

அடுத்து நேரடியாக வெவ்வேறு கெட்டப்புகளுடன் தோன்றும் நடிகர் அஜித் குமார், ''நாம எவ்வளவு தான் குட்டாக இருந்தாலும், இந்த உலகம் நம்மை பேட் ஆக ஆக்குது'' என வசனம் பேசுகிறார்.

இடையில் ஒரு கார் வேகமாக ப...