இந்தியா, மார்ச் 14 -- Good Bad Ugly Movie Update: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் கதை இப்படித் தான் இருக்கும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து படத்தை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

குட் பேட் அக்லி படத்தின் கதை சுருக்கம் வெளியானதாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பதவின் படி, குட் பேட் அக்லி படம், மனம் திருந்தி வாழ நினைக்கும் ஒரு ரவுடியை பற்றியது என ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

இந்தக் கதையை பலரும் ட்விட்டர் (எக்ஸ் தளம்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தெரிவித்து வருவதால், குட் பேட் அக்லி திரைப்படம் ட்ரெண்ட்டிங்கில் இர...