இந்தியா, ஏப்ரல் 11 -- அஜித்குமாரின் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையில் நேற்று (ஏப்ரல் 10 ) வெளியான குட் பேட் அக்லி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. இருப்பினும் படம் சிறந்த என்டர்டெயின்மென்ட் படமாகவும் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அஜித்தின் நடிப்பு பலரை கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்தான தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

அஜித்குமாரின் குட் பேட் அக்லி படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான அஜித்தின் விடாமுயற்சியின் மந்தமான வசூலுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் வெற்றிகரமான வரவைக் குறிக்கும் வகையில் இந்த வசூல் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | Good Bad Ugly Update: முதல் நாளிலே ஹெச் டி த...