இந்தியா, ஏப்ரல் 10 -- அமைச்சர் கீதா ஜீவன் அஜித் ரசிகர்களுடன் 'குட் பேட் அக்லி' படம் பார்த்துவிட்டு கேக் வெட்டி கொண்டாடியது அரசியல் விவாதங்களை கிளப்பி உள்ளது.

நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், அரசியல் பின்னணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், தனது திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துபவர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், சமீப காலமாக திமுக அமைச்சர்கள் அஜித்தின் செயல்பாடுகளை புகழ்ந்து வந்தனர் இந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை முதல்நாளில் பார்த்ததது மட்டுமின்றி கேக் வெட்டி கொண்டாடியது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

நடிகர் அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று, ஏப்ரல் 10, 2025 அன்று தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெள...