இந்தியா, பிப்ரவரி 28 -- Good Bad Ugly: குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீஸர் 10 பில்லா, 10 தீனா போன்ற படங்களுக்குச் சமமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீஸர் யூடியூபில் மட்டுமல்லாது, அஜித்தின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக தியேட்டரில் காட்சிப்படுத்தப்பட்டது.

குறிப்பாக சென்னை ரோஹிணி ஸ்கிரீனில் ரிலீஸ் செய்யப்பட்ட குட் பேட் அக்லி டீஸரை, அஜித் ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்கும் காட்சி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இக்காட்சியை ரோஹிணி திரையரங்கில் வெளியிடும்போது, படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித்தின் மேலாளருமான சுரேஷ் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதவிர, தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் குட் ப...