இந்தியா, பிப்ரவரி 22 -- Good Bad Ugly:ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ''குட் பேட் அக்லி'' படத்தில் நடிகை திரிஷா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் 'குட் பேட் அக்லி' என்ற படத்தைத் தயாரித்து இருக்கிறது. மேலும், இப்படம் வரக்கூடிய, இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்துடன் மீண்டும் ஜோடி போடும் நடிகை திரிஷாவின் பெயர் 'ரம்யா' என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னதாக படக்குழுவினர் சார்பில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த 2...