இந்தியா, பிப்ரவரி 15 -- Gold Rate Today 15.02.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (பிப்ரவரி 15) ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.7,890க்கு விற்பனை செ...