இந்தியா, ஜனவரி 29 -- Gold Rate Today 29.01.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...