இந்தியா, பிப்ரவரி 4 -- Gold Rate Today 04.02.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 04) சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.62,480-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.105 உயர்ந்து ரூ.7810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ப...