இந்தியா, ஏப்ரல் 4 -- தங்க நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ரிசர்வ் வங்கி பதிலளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறையின்படி, வங்கிகளில் தங்க நகைக் கடன் பெற்றவர்கள், அசல் தொகையுடன் வட்டியையும் முழுமையாக செலுத்திய பின்னரே மீண்டும் நகையை அடகு வைக்க முடியும். முன்பு, ஆண்டுதோறும் வட்டி தொகையை மட்டும் செலுத்தி மறு அடகு வைக்கும் நடைமுறை இருந்த நிலையில், இந்த புதிய விதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், ஏழை மற்றும் எளிய மக்கள் வங்கிகளில் நகைகளை அடகு வைப்பதில் பெரும் சிரமங்களை சந்திப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புதிய சுற்றறிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும் என...