இந்தியா, பிப்ரவரி 15 -- GM Kumar: நான் 25 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். ஆனால், அது கடைசி வரை இல்லாமல்போய்விட்டது. அதற்குக் காரணம் இதுதான் நடிகர் மற்றும் இயக்குநர் ஜி.எம். குமார் பேசியிருக்கிறார்.

இவர் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் என்னும் பல்வேறு படங்களை இயக்கி இருக்கிறார். வெயில், அவன் இவன் ஆகியப் படங்களில் முக்கிய நடிகராக கவனம் ஈர்த்தவர்.

ரெட் நூல் யூட்யூப் சேனலில் பிப்ரவரி 14ஆம் தேதி இயக்குநர், நடிகர் ஜி.எம்.குமார் அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்திருக்கிறார்.

அவற்றின் தொகுப்பினைக் காணலாம். அதில், ''

காதல் என்கிற கான்செப்ட்டே கிடையாது. காமத்தில் ஆரம்பிக்கிறது, அதை கவிதையாக காதல் என்று சொல்லிட்டாங்க. காமம் என்பது கெட்ட வார்த்தை. கண், காது, மூக்கு எதுவும் கெட்ட வார்த்தை...