இந்தியா, பிப்ரவரி 8 -- பிங்க் வண்ணம் என்பது அழகு, அன்பு மற்றும் தூய்மை ஆகிய நற்குணங்களை குறிக்கும் வண்ணம் ஆகும். இந்த வண்ணத்தை பிரதிபலிக்கும் பெயர்கள் பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்தப் பெயர்கள், எளிமை, அழகு, கருணை மற்றும் பெண் மனம் என அனைத்தையும் குறிக்கிறது. மேலும் இயற்கையின் கம்பீரத்தையும் கொண்டது. பிங்க் வண்ண மலர்களிடம் இருந்து பெறப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்களைப் பாருங்கள்.

குஞ்ஜித்தா என்பது பிங்க் வண்ண அதிமதுர மலர்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர்களாகும். இது தெய்வீகத்தன்மை, தூய்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. இது ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற மலர் மட்டுமின்றி, ஆயுர்வேத மருத்துவ குணமும் கொண்டது. இதை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற அர்த்தமுள்ள பெயராகும்.

தாரிணி என்றால் பிங்க் வண்ண செம்பருத்தி பூக்கள் என்று பெயர். இது பலம் மற...