இந்தியா, மே 4 -- Ghilli ReRelease collection : லோக் சபா தேர்தல் காரணமாக தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் பழைய பிளாக்பஸ்டர் படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி, தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா,பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம், கில்லி. இப்படம் இருபது ஆண்டுகளுக்குப்பின், மறு வெளியீடு ஆகியுள்ளது. மீண்டும் வெளியிடப்பட்ட இந்தப்படத்திற்கு, மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தப்படம் தற்போது உலக அளவில் 30 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், ரீ ரிலிஸ் ஆன திரைப்படங்களிலேயே, அதிகம் வசூல் செய்த படமாக கில்லி மாறியிருக்கிறது....