இந்தியா, ஏப்ரல் 21 -- Vijay Ghilli Re Released Review: பல ஆண்டுகளுக்குப் பின் மறு திரையிடலுக்கு வந்தாலும், பேருக்கு எற்ற மாதிரி கில்லியாக வந்து திரையேட்டரில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது கில்லி. தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மகேஷ்பாபு நடித்த ஒக்கடு திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் சார் கில்லி.

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஸ் வித்யார்த்தி உள்ளிட்ட நிறைய திரை நட்சத்திரங்கள் நடித்து 2004 ம் ஆண்டு வெளியாகி, தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது கில்லி. தரணியின் இயக்கம், வித்யாசாகரின் இசை என கில்லியின் வெற்றிக்கு பல காரணிகள் உண்டு. இதெல்லாம் 2004ல் நடந்த அற்புதம். 20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட போது, அதே உற்சாகம் குறையாமல், சிறந்த ஓப்பனிங் பெற்று கில்லி வசூல் சாதனை படைத்திருக்கிறது. படம் மீண்டும் ரிலீஸ் ச...