இந்தியா, மார்ச் 27 -- தலைமுடி வளர்ச்சி முதல் மூளை செயல்பாடு வரை நெய்யில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் காரணமாகவோ என்னவோ நம் வீட்டு பாட்டிகள் ரொட்டி முதல் லட்டுக்கள் வரை நெய் ஊற்றி நல்ல சுவையுடன் இருக்குமாறு செய்து கொடுத்துள்ளார்கள்.

லேசாக தொட்டு நக்கினாலும் அதன் அற்புத சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட தூண்டும் விதமாக அமைந்துள்ள நெய்யை பிடிக்காதவர்களும் ஏராளமானோர் உள்ளனர். நெய் சாப்பிடாவிட்டாலும் பராவயில்லை என்று அவர்கள் கூறுவதுபோல் அதை தவிர்ப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த வித குறைபாடும் ஏற்படாது என்பதும் உண்மையே.

ஆயுர்வேத முறைப்படி நாள்தோறும் நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் மிக முக்கியமானதாக நெய் உள்ளது. அதே சமயம் இது எல்லோருக்கும் பொருத்தமான உணவு இல்லை என்கிற பேச்சும் உள்ளது...