இந்தியா, பிப்ரவரி 1 -- Gautham Menon: தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவரது ஒவ்வொரு படத்திலும் வரும் காதல் காட்சிகளும், பெண்களை அவர் வர்ணிக்கும் விதமும், படத்தின் பாடல்களும் தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதே இல்லை.

அப்படிப்பட்ட இயக்குநர் சில ஆண்டுகளாக, பொருளாதார சிக்கல்களால் படம் எடுப்பதை தவிர்த்து படங்களில் நடித்து வந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பின் மலையாள நடிகர் மம்முட்டியை வைத்து டோம்னிக் அண்டு தி லேடிஸ் பர்ஸ் எனும் படத்தை இயக்கினார்.

இந்தப் படத்தின் புரொமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனை நோக்கி பாயும் தோட்டா தன்னுடைய படம் அல்ல என்றும். அந்தப் படத்தில் உள்ள பாடல் ஒன்று மட்டும் தான் எனக்கு நியாபகம் உள்ளது எனக் கூறியிருப்பார்.

இவரது இந்த பேட்டி வைரலான நிலையில், பலரும் எனை ...