இந்தியா, ஜனவரி 26 -- Gautham Menon: தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு ஜானர்களில் கதை சொல்வதில் வல்லவர்கள். உதாரணமாக, மணிரத்னம் புராண கதைகளை இன்றைய சூழலுக்கு தகுந்த மாதிரி படமாக எடுப்பார், ஷங்கர் லஞ்சம், ஊழலுக்கு எதிரான படங்களை எடுப்பார்.

கௌதம் மேனன், அதிரடி ஆக்ஷன் கலந்த காதல் கதையை எடுப்பார், பாலா சமூகத்தில் உள்ள அவலங்களை படமாக எடுப்பார், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் சாதிய பிரச்சனைகளை படமாக எடுப்பர்.

இப்படி ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பாதை உள்ள நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், சாதிய படங்கள் குறித்த தன்னுடை கருத்தை முன் வைத்துள்ளார்.

பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், "எனக்கு இந்த படங்களை எல்லாம் குறை சொல்லனும்ன்னு ஒன்னும் இல்ல. சாதியை வ...