இந்தியா, பிப்ரவரி 16 -- மல்லிகை மலரை வீட்டில் வைத்து வளர்ப்பது மற்றும் பராமரிப்பு என்று பாருங்கள். வீட்டில் மல்லிகைப் பூக்களை தொட்டியில் வைத்து வளர்ப்பதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

மல்லிகை மலர் எப்போதும் கோடைக்கால மலர் என்று அழைக்கப்படுகிறது. இது வெப்பம் அதிகமுள்ள இடங்களில் தொடர்ந்து மலரும் தன்மைகொண்டது. வெப்பம் குறைந்த இடங்களில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் நாட்களில் வளரும். குளிர் காலத்தில் தாமதமாக வளரும். கடும் குளிரில் தாவரத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். இதை நீங்கள் நல்ல முறையில் பராமரித்தால், இந்தச் செடி ஒவ்வொரு சீசனிலும் நன்றாக மலர் கொடுக்கும்.

மல்லிகைக்கு தொட்டியின் அளவு 12 இன்ச் இருக்கவேண்டும். நீங்கள் 8 முதல் 10 இன்ச் ஆழம் வரை உள்ள தொட்டியைக் கூட தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பிளாஸ்டிக் தொட்டியைவிட மண் அல...