இந்தியா, பிப்ரவரி 1 -- உங்கள் வீட்டு பால்கனி தோட்டத்திலே எலுமிச்சை பழச்செடியை எளிதாக வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள். வீட்டில் தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் எலுமிச்சைப்பழங்களை வீட்டில் வளர்ப்பதில் தயக்கம் காட்டுவார்கள். ஏனெனில் அதில் அடிக்கடி பூ பூக்கும் ஆனால், பனிக்காலத்துக்கு முன்னர்தான் காய் காய்க்கும். நீங்கள் இதற்கு முன்னர் இந்த பிரச்னைகளை சந்தித்து இருந்தீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, பழத்தை பால்கனி தோட்டத்திலே வளர்த்துப் பாருங்கள்.

நீங்கள் விதைகள் வைத்து முளைக்க வைக்கப் போகிறீர்களா அல்லது செடியை வாங்கி வளர்க்கப்போகிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் விதையில் இருந்து வளர்க்கும்போதுதான் நீங்கள் முழு வளர்ச்சி மற்றும் வளரும் நிலை என அனைத்தையும் நீங்கள் ...