இந்தியா, பிப்ரவரி 14 -- பால்கனியில் காய்கறிகள் வளர்ப்பது உங்களுக்கு நல்லது. உங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நீங்கள் அறுவடை செய்துகொள்ளலாம். உங்கள் வீட்டு பால்கனியிலேயே நீங்கள் வளர்க்க ஏதுவான செடிகள் என்னவென்று பார்க்கலாம். பால்கனியில் இருந்து பறித்து வந்து வீட்டுக்குள் சமைத்து சாப்பிட்டு ஒரு நாளை எளிதாக கடந்துவிடலாம். இந்த அனுபவம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும். நீங்கள் வீட்டில் காய்கறிகள் வளர்க்கும்போது, அதன் புத்துணர்ச்சி உங்களை பரவசமூட்டும். குறைவான இடத்திலே கூட வளர்க்க ஏதுவான காய்கறிகளை உங்களுக்கு கூறுகிறோம். இவை என்னவென்று தெரிந்துகொண்டு வளர்த்து பலன்பெறுங்கள்.

வெண்டைக்காய், ஆங்கிலத்தில் லேடிஸ் ஃபிங்கர், இந்தியில் பிண்ட அல்லது ஓக்ரா, இந்த காயை நீங்கள் எளிதாக வீட்டிலேயே வளர்த்துவிட முடியும். இவை இதமான சூழலில் க...